ராமர் கோயில் நினைவு தபால் தலைகளை பிரதமர் மோடி வெளியிட்டார்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, ராமர் கோவில் நினைவு தபால் தலைகளையும், உலகம் முழுவதும் ராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகளின் புத்தகத்தையும் இன்று வெளியிட்டார். ராமர் கோவிலை குறிப்பிடும் வகையிலான ராமர் கோவில், கணேஷ், ஹனுமான், ஜடாயு, கேவத்ராஜ் மற்றும் மாஷப்ரி உள்ளிட்ட 6 தபால் தலைகள் உள்ளன.

மேலும், உலகம் முழுவதும் இருக்கும் ராமர் பற்றிய தபால் தலைகளின் ஆல்பத்தையும் வெளியிட்டார். பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், ‘ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யும் நிகழ்விற்கான ஏற்பாடு நடக்கையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்தது.

ராமர் கோயிலை குறிப்பிடும் வகையிலான 6 நினைவு தபால் தலைகள் மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் ராமர் பற்றிய தபால் தலைகளின் ஆல்பம் வெளியிடப்பட்டது. நாட்டு மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து ராம பக்தர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

RELATED ARTICLES

Recent News