பிரதமர் மோடியை கொலை செய்ய வேண்டும்..காங்கிரஸ் தலைவரின் பேச்சால் சர்ச்சை..!

மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மாநில அமைச்சருமான ராஜா படேரியா, காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் உரையாடினார். அப்போது இந்திய அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டும் என்றால், பிரதமர் நரேந்திரே மோடியை கொலை செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

உடனே அதே விடியோவில் மோடியை வீழ்த்துவதைதான் கொல்ல வேண்டும் என கூறினேன் என விளக்கம் அளித்தார். ஆனால், அவர் மோடியை கொலை செய்ய வேண்டும் என்று பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதையடுத்து ராஜா படேரியாவை கைதுசெய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய மத்தியப் பிரதேச அரசு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.