Connect with us

Raj News Tamil

சீனா வெளியிட்ட வரைபடம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும்: ராகுல் காந்தி!

இந்தியா

சீனா வெளியிட்ட வரைபடம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும்: ராகுல் காந்தி!

நிகழாண்டுக்கான நாட்டின் புதிய வரைபடத்தை சீனா திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் இந்திய நிலப் பகுதிகளான அருணாசல பிரதேசம், அக்சாய் சின் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, அந்த வரைபடத்தை நிராகரித்துள்ளது.

இது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்து கூறியதாவது: லடாக் சென்ற நான் இப்போதுதான் திரும்பினேன். லடாக்கில் ஓா் அங்குல நிலம்கூடப் பறிபோகவில்லை என பிரதமா் கூறி வருகிறார். அவா் கூறுவது முழுப் பொய் எனப் பல ஆண்டுகளாக நான் கூறி வருகிறேன். எவ்வித உரிமையும் இல்லாத சீனாவால் லடாக் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதை அப்பகுதி மக்கள் அறிவார்கள். இந்த வரைபடம் மிகவும் தீவிரமான பிரச்னை. பிரதமா் இது குறித்து சில வார்த்தைகளாவது பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.

More in இந்தியா

To Top