Connect with us

Raj News Tamil

மூன்றாவது முறையாக பிரதமர் மோடி இன்று பதவியேற்பு!

இந்தியா

மூன்றாவது முறையாக பிரதமர் மோடி இன்று பதவியேற்பு!

டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார்.

நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 543 தொகுதிகளில் போட்டியிட்டு 293 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக மட்டும் தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றது.

இதையடுத்து டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி புதிய எம்.பி.க்களின் கூட்டத்தில், கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு 7.15 மணியளவில் பிரதமர் மோடி 3-ஆவது முறையாக இன்று (ஜூன் 9) பதவியேற்கவுள்ளார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவுகள், செஷல்ஸ் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top