பிரதமர் மோடி தமிழகம் வருகை..! எதிர்ப்பு தெரிவித்த 30-பேர் அதிரடி கைது..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, திண்டுக்கல் காந்தி பல்கலை கழக விழாவிற்கு இன்று வருகை தந்தார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எறிவாயு மற்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை உடனடியாக தொடங்க வேண்டும் போன்ற பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர்.

அதில் கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், உள்ளிட்ட தலைவர்கள் போரட்டத்தில் கலந்து கொண்டனர். தடையை மீறி போட்டத்தில் ஈடுபட்ட 30-பேரை தமிழக போலீஸ் அதிரடியாக கைது செய்தனர். மேலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.