Connect with us

Raj News Tamil

மதுரைக்கு பிரதமர் வருகை: பிப்.27, 28 தேதிகளில் போக்குவரத்து மாற்றம்!

தமிழகம்

மதுரைக்கு பிரதமர் வருகை: பிப்.27, 28 தேதிகளில் போக்குவரத்து மாற்றம்!

மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாஞ்சான் லட்சுமி பள்ளி வளாகத்திற்குள் நடைபெறவுள்ள சிறுகுறு நடுத்திர வர்த்தக தொழில் அதிபர்கள் பங்குபெறும் டிஜிட்டல் வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகின்ற 27.02.2024-ம் மற்றும் 28.02.2024-ம் ஆகிய தேதிகளில் மதுரை மாவட்டத்திற்கு வருகைதர உள்ளார்கள். இது தொடர்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி வருகையின் போது கீழ் காணும் வகையில் போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளது.

► திருச்சியில் இருந்து மதுரை வழியாக சிவகங்கை, ராம்நாடு மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் மேலூர், திருவாதவூர் வழியாக பூவந்தி- திருப்புவனம்- முக்குளம்- காரியாபட்டி மார்க்கமாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.

► திருச்சியில் இருந்து மதுரை வழியாக தேனி, திண்டுக்கல், விருதுநகர் செல்லும் வாகனங்கள் மேலூர், அழகர் கோவில் சாலை வழியாக அப்பன்திருப்பதி, கடச்னேந்தல்- மதுரை மாநகர் மார்க்கமாக நாகமலை புதுக்கோட்டை பிரிவு வழியாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.

► திருச்சியில் இருந்து மதுரை வரும் வாகனங்கள் ஒத்தக்கடை நான்கு வழி சாலை சந்திப்பு வழியாக உயர் நீதிமன்றம்- உத்தங்குடி- மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு- எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் (மாட்டுத்தாவனி) மார்க்கமாக வந்தடையும்.

► திருச்சியில் இருந்து தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் ஒத்தக்கடை நான்கு வழி சாலை சந்திப்பு வழியாக மதுரை மாநகர்- நாகமலை புதுக்கோட்டை நான்கு வழி சாலை சந்திப்பு- செக்கானூரணி- திருமங்கலம் மார்க்கமாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.

► திருச்சியில் இருந்து சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் ஒத்தக்கடை நான்கு வழி சாலை சந்திப்பு மற்றும் திருமோகூர் ரோடு சந்திப்பு வழியாக திருவாதவூர்- பூவந்தி மார்க்கமாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.

சிவகங்கையில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் பூவந்தி வழியாக திருவாதவூர்- ஒத்தக்கடை- மேலூர் மார்க்கமாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.

► சிவகங்கையில் இருந்து தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் பூவந்தி வழியாக திருப்புவனம்- முக்குளம்- காரியாபட்டி மார்க்கமாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.

► சிவகங்கையில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் ராஜாக்கூர் சந்திப்பு வழியாக ராஜாக்கூர்- புதுதாமரைப்பட்டி- ஒத்தக்கடை- மேலூர் மார்க்கமாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.

► ராமநாதபுரத்தில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் சக்குடி பாலம் வழியாக பூவந்தி- திருவாதவூர்- ஒத்தக்கடை மார்க்கமாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.

► ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் திருப்புவனம் நான்கு வழி சாலை வழியாக திருப்புவனம்- முக்குளம்- காரியாபட்டி மார்க்கமாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.

► தூத்துக்குடியில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் A.முக்குளம் சந்திப்பு வழியாக முக்குளம்- திருப்புவனம்- பூவந்தி- ஒத்தக்கடை- மேலூர் மார்க்கமாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.

► தூத்துக்குடியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் காரியாபட்டி சந்திப்பு வழியாக மருதங்குடி- கள்ளிக்குடி- சோழவந்தான் ரோடு சந்திப்பு- செக்கானூரணி- சோழவந்தான் – வாடிப்பட்டி மார்க்கமாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.

► தூத்துக்குடியில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் சோளங்குருணி சந்திப்பு (வளையங்குளம்) வழியாக நெடுங்குளம் ரோடு- திருப்புவனம்- பூவந்தி- திருவாதவூர்- மேலூர்- மார்க்கமாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.

► திருநெல்வேலி மற்றும் விருதுநகரில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் திருமங்கலம் வழியாக சோழவந்தன் சாலை சந்திப்பு- செக்கானூரணி- நாகமலை புதுக்கோட்டை- அச்சம்பத்து மார்க்கமாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.

► திருநெல்வேலி மற்றும் விருதுநகரில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் திருமங்கலம் வழியாக சோழவந்தான் சாலை சந்திப்பு- செக்கானூரணி-வாடிப்பட்டி- மார்க்கமாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.

► ராஜபாளையத்தில் இருந்து மதுரை, திருச்சி மற்றும் திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் T.கல்லுப்பட்டி வழியாக பேரையூர்- உசிலம்பட்டி- விருவீடு வழியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கும் உசிலம்பட்டிலிருந்து செக்கானூரணி- நாகமலை புதுக்கோட்டை மார்க்கமாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.

► தேனியில் இருந்து தூத்துக்குடி- திருநெல்வேலி- செல்லும் வாகனங்கள் செக்கானூரணி தேவர் சிலை சந்திப்பு வழியாக திருமங்கலம் (சோழவந்தான் ரோடு சந்திப்பு)- விருதுநகர் மார்க்கமாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.

► திண்டுக்கலில் இருந்து தூத்துக்குடி- திருநெல்வேலி- விருதுநகர் செல்லும் வாகனங்கள் நாகமலை புதுக்கோட்டை நான்கு வழி சாலை சந்திப்பு வழியாக செக்கானூரணி தேவர் சிலை- திருமங்கலம் (சோழவந்தான் ரோடு சந்திப்பு)- மார்க்கமாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.

மேற்கண்ட வகையில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top