“இவ்வளவு கம்மியா” – ஷாக் தந்த பிரின்ஸ் வசூல்!

டாக்டர், டான் ஆகிய 2 ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன், ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். ஆனால், நேற்று வெளியான பிரின்ஸ் திரைப்படம், போதிய அளவு வரவேற்பை பெறவில்லை.

கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம், தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழில் இந்த திரைப்படம் 2.2 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாம்.

மேலும், தெலுங்கில், 27 லட்சம் மட்டும் தான் வசூலித்துள்ளதாம். சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களை காட்டிலும், மிகக்குறைவாகவே இந்த திரைப்படம் வசூலித்துள்ளது, படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.