Connect with us

Raj News Tamil

அஜித் படத்தையே மிஞ்சிய பிரித்விராஜ்!

சினிமா

அஜித் படத்தையே மிஞ்சிய பிரித்விராஜ்!

ப்ளெஸ்ஸி இயக்கத்தில், பிரித்விராஜ், அமலா பால் ஆகியோர் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் ஆடு ஜீவிதம். பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், வசூலையும் குவித்து வருகிறது.

இந்த படத்திற்கு பிறகு, தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட் படங்களில் பிரித்விராஜ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோகன் லாலை வைத்து எம்புரான் என்ற மலையாள திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார்.

ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு, ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாயை, பிரித்விராஜ் செலவு செய்து வருகிறாராம்.

இந்த தகவலை அறிந்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கே, ஒரு நாளைக்கு 50 லட்சம் ரூபாய் தான் செலவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top