Connect with us

Raj News Tamil

வில்லனாக நடித்துள்ள பிரபல மாஸ் ஹீரோ!

சினிமா

வில்லனாக நடித்துள்ள பிரபல மாஸ் ஹீரோ!

ஹீரோவாக நடித்துள்ள நடிகர்கள் வில்லன்களாக நடிப்பதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், ஒருசில நடிகர்கள், கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டால், எந்த கதாபாத்திரமாக நடிப்பார்கள்.

அவ்வாறு, பிரபல நடிகர் ஒருவர், வில்லனாக, திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். அதாவது, அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப், சோனாக்ஷி சின்ஹா, ஆலயா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் பாடே மியான் சோடே மியான்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில், சைக்கோதனமான வில்லனிடம், இரண்டு கதாநாயகர்கள் மோதுவது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் மத்தியில், அந்த முகமுடி அணிந்த சைக்கோதனமான வில்லன் யார் என்று, கேள்வி எழுந்தது. இதற்கு, படக்குழுவினர் தற்போது விடை அளித்துள்ளனர்.

அதாவது, இந்த கதாபாத்திரத்தில், நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் தான் நடிக்க உள்ளார் என்று அதிகாபரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 10-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top