கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கனிமங்கலம் பகுதியில் சென்று கொண்டு இருந்த தனியாா் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானது.
தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேருந்து விபத்தில் காயம் அடைந்த அனைவரையும் அருகில் உள்ள சுகாதார மையங்களுக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ளதாக திருச்சூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், திருச்சூர் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளனர்.
50 பயணிகளுடன் சென்ற அந்த தனியார் பேருந்து முன்னாடி சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது இந்த விபத்து நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.