தமிழகத்தில் தொடர் விடுமுறை காரணமாக பொது மக்கள் பலர் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
இந்நிலையில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
சென்னை – கன்னியாகுமரி ஏசி பஸ் ரூ.3,000, சாதாரண பஸ் ரூ.1,400, சென்னை – நெல்லை ஏசி பஸ் ரூ.2,450, சாதாரண பஸ் ரூ.1,400, சென்னை – மதுரை ஏசி பஸ் ரூ 2,000, சாதாரண பஸ் ரூ. 1,200 வரை என டிக்கெட் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இதனால் ஊருக்கு செல்லும் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.