ஹெல்மெட் போடுங்க.. ஒரு கிலோ தக்காளியை இலவசமாக அள்ளுங்க.. வேறலெவல் விழிப்புணர்வு தந்த தனியார் நிறுவனம்..

தஞ்சையில், ஹெல்மெட் அணிந்துக் கொண்டு இருசக்கர வாகனத்தை இயக்கிய வாகன ஓட்டிகளுக்கு, ஒரு கிலோ தக்காளி, இலவசமாக வழங்கப்பட்டது.

வாகன விபத்தால் ஏற்படும் முக்கால் வாசியான உயிரிழப்புகளுக்கு, ஹெல்மெட் அணியாமல் இருப்பதே, முக்கிய காரணமாக அமைகிறது.

இதன்காரணமாக, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு, 100 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயை அபராதமாக அரசு உயர்த்தியிருந்தது.

இருப்பினும், இதனை அலட்சியமாக கருதும் சில வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணியாமலே, வாகனத்தை இயக்கி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, தஞ்சை மாவட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சமையலுக்கு தக்காளி அவசியம், உயிருக்கு ஹெல்மெட் அவசியம் என்ற வாசகத்துடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின்போது, ஹெல்மெட் அணிந்துக் கொண்டு வாகனங்களை இயக்கியவர்களுக்கு, ஒரு கிலோ தாக்காளி, இலவசமாக வழங்கப்பட்டது.

தக்காளி விலை உயர்வை உணர்த்தும் வகையிலும், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News