சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் கவின். நட்பு-னா என்னனு தெரியுமா? படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர், லிஃப்ட், டாடா ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
இதன்காரணமாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ள கவின், தனது அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை நடன இயக்குநர் சதீஷ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் ஆகிய படங்களில் நடித்த பிரியங்கா அருள் மோகன் தான், கவினுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும், தகவல் கசிந்துள்ளது.