தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இந்த படத்திற்கு பிறகு, பாலிவுட்டில் களமிறங்கிய இவர், பல முன்னணி நடிகர்களின் படங்களில், நடித்திருக்கிறார்.
இதையடுத்து, ஹாலிவுட் வரை வளர்ந்த பிரியங்கா சோப்ரா, பே வாட்ச், தி ஸ்கை இஸ் பிங்க், தி மேட்ரிக்ஸ் ரிசரக்ஷன் என்று பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், தி சிட்டாடல் என்ற ஆங்கில தொடரிலும் கலக்கியிருக்கிறார்.
இவ்வாறு பல்வேறு மொழி சினிமா துறைகளில் பணியாற்றியுள்ள இவர், ஒரு படத்திற்கு 14 கோடிகளில் இருந்து 40 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். மேலும், 620 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.