டாக்டர், டான், கேப்டன் மில்லர் போன்ற பல்வேறு ஹிட் படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். இவர், சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு, காரில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை பார்த்த ரசிகர் ஒருவர், பைக்கில் பின்தொடர்ந்து வந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரியங்கா, பின்தொடர்ந்து வரவேண்டாம் என்று ரசிகரை எச்சரித்துள்ளார்.
இருப்பினும், காரின் பின்னால் அந்த ரசிகர் பின்தொடர்ந்து வந்ததால், வண்டியை நிறுத்தியுள்ளார். இதையடுத்து, அறிவுரை கூறிய பிரியங்கா, அவருடன் செல்ஃபி எடுத்துவிட்டு, அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார்.