ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரமக்குடியில் ரவி தியேட்டர் அருகே மின்சார ட்ரான்ஸ்ஃபார்ம் உள்ளது இதனை ஒட்டியவாறு குருபூஜை விழாவிற்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார தோரணம் கொடிக்கம்பங்களை விழா முடிந்தும் அகற்றப்படாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் சரவணன் கொடிக்கம்பங்கள் தோரணம் பிளக்ஸ் பேனர்களை அகற்ற முயற்சித்த போது அருகில் இருந்த மின் கம்பியில் பட்டு சார்பு ஆய்வாளர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.