Connect with us

Raj News Tamil

ஒரு வழியாக வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா!

சினிமா

ஒரு வழியாக வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா!

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், பருத்தி வீரன் படம் தொடர்பான சர்ச்சை குறித்து பேசியிருந்தார்.

மேலும், அப்படத்தின் இயக்குநர் அமீரையும் கடுமையான வார்த்தைகள் மூலம், விமர்சனம் செய்திருந்தார். இது சினிமா துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், அமீருக்கான ஆதரவு குரல்களும், இணையத்தில் பெருகிக் கொண்டே சென்றது. இந்நிலையில், இந்த விவாகரம் தொடர்பாக, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், அமீர் என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு தான் நான் பதில் கூறியிருந்தேன். அந்த வார்த்தைகள் அவரை புண்படுத்தியிருந்தால், நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதன்மூலம், இந்த பிரச்சனைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top