சென்னை அண்ணா நகரில் மசாஜ் பார்லர் என்ற பெயரில், பாலியல் தொழில் படுஜோராக நடப்பதாக வெளியான தகவல், பலரையும் அதிர வைத்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களை தவிர, மற்ற மாநிலங்களில், பாலியல் தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி, சிலர் சட்டவிரோதமாக இந்த தொழிலை செய்து வருகின்றனர்.
தமிழகத்திலும் பாலியல் தொழில் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், மசாஜ் பார்லர் என்ற பெயரில், இந்த தொழில் ஆங்காங்கே படுஜோராக நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அப்பகுதி போலீசாரின் உதவியுடன் தான் இந்த தொழில் அங்கு நடந்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் கசிந்துள்ளது.
இதுமட்டுமின்றி, பெரிய நெட்வொர்க்காக மாறி உள்ள இந்த தொழில், அம்பத்தூர், புரசைவாக்கம் என சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது அரசின் கவனத்திற்கு சென்று, நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…