விமான நிலைய விரிவாக்கம்.. ஆபத்தான முறையில் எதிர்ப்பு தெரிவித்த மக்கள்..

மதுரை அருகே, விமான நிலைய விரிவாக்கத்திற்கு, ஆபத்தான முறையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக, அப்பகுதியில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 நாட்களாக, கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நிலத்தை கையகப்படுத்துவதற்காக, அரசு அதிகாரிகள் இன்று கிராமத்திற்கு வருகை தந்தனர். இதனை அறிந்த கிராம மக்கள், நீர்நிலை தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று, தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

மேலும், அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாகவும், அதிகாரிகளை அவர்கள் எச்சரித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News