திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகே பாசிச பாஜக ஆளும் மணிப்பூரில் இளம் பெண் மீது பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வுக்கு வாய் திறக்காத பிரதமர் மோடியை கண்டித்து திண்டுக்கல் மேற்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கண்டன போராட்டம் நடைபெற்றன.

கடந்த மூன்று மாத காலமாக நடைபெற்று வரும் மணிப்பூர் கலவரத்தை கண்டுகொள்ளாமல் பாஜக மறைமுகமாக கலவரத்தை தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டினர். மேலும் கலவரத்திற்கு பொறுப்பேற்று மணிப்பூர் முதல்வர் மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறி கண்டன போராட்டம் நடைபெற்றன.
இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட அனைத்து சமூக பெண்களும் சமூக ஆர்வலர்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.