ஆளுநருக்கு எதிராக போராட்டம்!

சேலத்தில் பெரியார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோயம்புத்தூர் சென்றார். 

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், வாழ்வுரிமை கட்சியினர் சேலம் அரசு பொறியியல் கல்லூரி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவரை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

RELATED ARTICLES

Recent News