முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஏ.டி கலிவரதன் விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவராக இருந்து வருகிறார். இவர் கடந்தாண்டு பா.ஜ.க பெண் நிர்வாகிகளிடம் ஆபாசமாக பேசும் விவகாரம் சர்ச்சையானது. இதனையடுத்து அவர் மாவட்ட தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அடுத்த இரண்டு மாதங்களில் விழுப்புரம் பா.ஜ.க இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில், தெற்கு மாவட்ட தலைவராக கலிவரன் நியமிக்கப்பட்டார். இதற்கு கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், கட்சி பொறுப்பு நியமனம் தொடர்பாக, பா.ஜ.க-வின் விழுப்புரம் மாவட்ட ஐ.டி பிரிவு தலைவர் பிரபாகரன் என்பவர் வி.ஏ.டி.கலிவரதனிடம் செல்போனில் பேசியது தற்போது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை கண்டித்து அலுவலகத்தின் வெளியே தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், எந்த சலனமும் இல்லாமல் கலிவரதன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை ஈடுபட்டிருந்தார்.