தமிழகத்திற்கு காவிரிநீரை திறந்துவிடுவதைக் கண்டித்து பெங்களூருவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
காவிரி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18-ந் தேதி உத்தரவிட்டது.
காவிரிநீரை தமிழகத்துக்கு திறந்துவிடுவதைக் கண்டித்து, விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் சார்பில் பெங்களூரில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பெங்களூரு செல்லும் அரசு பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர், பெங்களூரு செல்லும் 11 அரசு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தை முன்னிட்டு பெங்களூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.