Connect with us

Raj News Tamil

“என் முடிவை கண்டு பெருமையாக உள்ளது” – சீரியல் நடிகையின் லெஸ்பியன் காதல்.. ஊடகத்திற்கு பேட்டி..

இந்தியா

“என் முடிவை கண்டு பெருமையாக உள்ளது” – சீரியல் நடிகையின் லெஸ்பியன் காதல்.. ஊடகத்திற்கு பேட்டி..

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர்கள் அஞ்சு மற்றும் கவிதா. ஓரின சேர்க்கையில் ஆர்வம் கொண்ட இவர்கள் இரண்டு பேரும், தற்போது திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் தங்களது கசப்பான அனுபவங்கள் குறித்தும், தற்போது வாழ்ந்து வரும் மகிழ்ச்சியான வாழ்க்கை குறித்தும், பேட்டி அளித்துள்ளனர்.

அந்த பேட்டியில், கவிதா பேசும்போது, “எங்களுடைய வீடியோக்கள், இணையத்தில் வைரலாக பரவும் என்பது எனக்கு தெரியும். ஆனால், அந்த வீடியோவை பார்த்த மக்கள், என்னுடைய குடும்பத்தையும், இந்த பிரச்சனையில் இழுத்தது, எனக்கு வருத்தமாக உள்ளது.

என்னுடைய பார்ட்னர் மிகவும் அக்கறையாக இருப்பார். என் முடிவை கண்டு பெருமையாக உள்ளது. நான் என் பார்ட்னருடன் மகிழ்ச்சியாக உள்ளேன். எதிர்காலத்தில் நாங்கள், ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து குழந்தையை தத்தெடுக்க ஆசைப்படுகிறோம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “என் துணைவி ஒரு டிவி சீரியல் நடிகை. நான் மேக்கப் கலைஞராக இருந்தேன். ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்திருந்தேன். ஆனால், நான் இப்போது பணியாற்றவில்லை.

ஏனென்றால், நான் சம்பாதிக்கிறேன் என்று என்னுடைய துணைவி உறுதியளித்திருக்கிறார். இதுமட்டுமின்றி, வேலை செய்வதற்கான எந்தவொரு தேவையும் தற்போது எனக்கு இல்லை” என்று கூறினார்.

More in இந்தியா

To Top