மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பேன் இந்தியா படமாக உருவான இப்படம், ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. முன்னதாக பொன்னியின் செல்வன் பாகம் 2-ன் உருவாகும் என்று அறிவித்த இருந்த படக்குழு, வரும் ஏப்ரம் மாதம் 28-ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவித்தது.
மேலும் இதற்கான ஏற்பாடுகளும் படு தீவிரமாக நடந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப வேலைகளை காரணம் காட்டி, அக்டோபர் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் இதனை மறுத்த படக்குழு, திட்டமிட்ட படி ஏப்ரல் 28 தேதி அன்று வெளியாகும் என தெரிவித்துள்ளது. இதுமட்டுமில்லாமல் இப்படத்தின் க்ளிப்ஸ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிரது.