பாத் ரூமில் அழுத சைக்கோ பட நடிகை..!

காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. பின்னர் செக்க சிவந்த வானம், சைக்கொ,ஜெயில் போன்ற வெற்றி படங்களில் நடித்த இவர், அடுத்தடுத்து பல்வேறு படங்களில் பிசியாகிவிட்டார்.

இந்த நிலையில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அதிதி, நான் நடிக்க வருவதற்கு முன் பல்வேறு அவமானங்களை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் பரத நாட்டியம் கற்றுக்கொண்டு நாடு முழுவதும் அரங்கேற்றம் நடத்தியபோது, சாரதா என்ற தமிழ் இயக்குனர் எனக்கு பட வாய்ப்பளித்தார், என்றும் ஆனால் இப்படம் வெளிவராததால் பாத்ரூமில் பலமுறை அழுதுள்ளதாக அதிதி ராவ் பேசியுள்ளார்.