2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். அப்போது, அவரை பேசவிடாமல், எதிர்கட்சி எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
நிதியமைச்சரின் உரைக்கு பின், உங்களுக்கும் பேச அனுமதி வழங்கப்படும் என்றும், நிதியமைச்சரின் உரையை தவிர மற்ற எதுவும், அவைக்குறிப்பில் இடம்பெறாது என்றும், சபாநாயகர் கூறினார்.
இருப்பினும், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, பட்ஜெட்டில் உள்ள திட்டங்கள் குறித்து, நிதியமைச்சர் வாசிக்கத் தொடங்கினார். அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்ததால், சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.