ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.70, அரை லிட்டருக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வந்தது.
ஆவின் நிர்வாகம் வியாழக்கிழமை முதல் நெய் மற்றும் வெண்ணெய் விலையை உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.14-க்கு விற்பனை செய்யப்பட்ட 15 மில்லி நெய் பாக்கெட் ஒரு ரூபாய் உயர்த்தி ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 100 மில்லி பாக்கெட் ரூ.70-ல் இருந்து ரூ.80-ஆகவும், 500 மில்லி லிட்டர் பாட்டில் ரூ.315-ல் இருந்து ரூ.365-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.630-ல் இருந்து ரூ.700-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.