சல்மான்  கானுக்கு  பகிரங்க  கொலை  மிரட்டல் !

பாலிவுட்  திரையுலகில்  முன்னணி நடிகரான  சல்மான்கான்  தொடர்ந்து  கொலைமிரட்டல்களை சந்தித்து  வருகிறார். அண்மையில்  மும்பை போலீஸ்  கட்டுப்பாட்டு அறைக்கு  சல்மான் கானை  கொன்றுவிடுவதாக அழைப்பு ஒன்று வந்தது. இவ்வழைப்பை தொடர்ந்து ,தீவிர  விசாரணையில்  மும்பை போலீசார் ஈடுபட்டனர். 

இறுதியில்  மிரட்டலானது  16 வயது சிறுவனிடம்  இருந்து வந்ததாக  தெறியவருகிறது.இதனால்  சல்மான் கான்  பலத்த பாதுகாப்பில் இருந்தார். 

இதனைத்தொடர்ந்து, பஞ்சாப்  பாடகர்  கொலை  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  குழுவினரில் ஒருவர்  சல்மான்  கானிற்கு  பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

இதுகுறித்து அந்நபர்  அளித்துள்ள பேட்டியில் , நாங்கள்  சல்மான் கானை  நிச்சியமாக  கொல்வோம் என்றும் நாங்கள்  உயிரோடு இருக்கும்  வரை  எங்கள்  எதிரிகளுக்கு எதிரான  முயற்சிகளை  மேற்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News