குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேரும் சகதியுமாக இருக்கும் மழை நீரில் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
புயல் காரணமாக கன மழை பெய்ததால் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்தது.இதனால் நோயாளிகள் மற்றொரு கட்டிடத்திற்கு மாற்றபட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தற்போது புறநகர் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பியும் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் தரைதளத்தில் இதுவரையில் தண்ணீர் அப்புறப்படுத்தபடாமலே இருக்கிறது. இதனால் தரைதளத்தில் சேரும் சகதியுமாக மாறியுள்ளது.
முதன்மை கட்டிடத்தின் தரைத்தளத்தை தவிர்த்து மற்ற இடங்களில் பிரசவ சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனைக்குள் சேரும் சகதியுமாக இருக்கும் மழை நீரில் நடத்து செல்லும் அவலும் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக தாம்பரம் மாநகராட்சி பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.