Connect with us

Raj News Tamil

ஸ்ரீலங்காவுக்கு கொடுக்கப்பட்ட கட்சத்தீவு.. சரமாரியாக கேள்வி எழுப்பிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

இந்தியா

ஸ்ரீலங்காவுக்கு கொடுக்கப்பட்ட கட்சத்தீவு.. சரமாரியாக கேள்வி எழுப்பிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் பரபரப்புரைகள் தீவிரமாக நடந்து வருகிறது. எதிர்கட்சியினர் ஆளும் கட்சியின் குறைகளையும், ஆளும்கட்சியினர், எதிர்கட்சி முன்பு செய்த தவறுகளையும் சுட்டிக் காட்டி, வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “யார் இதை செய்தார்கள் என்று எங்களுக்கு தெரியும். யார் இதை மறைத்தார்கள் என்பது தான் எங்களுக்கு தெரியாது. ஸ்ரீலங்கா அரசிடம், கட்சத்தீவு வழங்கப்பட்டது குறித்து, அறிவதற்கான உரிமை, பொதுமக்களுக்கு உள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ 1974-ஆம் ஆண்டு அன்று, கடல்வழி எல்லையை பிரித்துக் கொள்வது குறித்து, இந்திய- ஸ்ரீலங்கா அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. இதில், கட்சத்தீவு ஸ்ரீலங்காவின் அரசுக்கு வழங்கப்பட்டது.” என்று கூறினார்.

மேலும், “கடைசி 20 வருடங்களில், 6 ஆயிரத்து 184 மீனவர்கள், ஸ்ரீலங்கா அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் ஆயிரத்து 175 மீன்பிடி பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை குறித்து நாங்கள் தற்போது விவாதிப்பதற்கு, இந்த விஷயங்கள் தான் பின்புலமாக உள்ளது. இந்த பிரச்சனை திடீரென முளைத்தது அல்ல. இது இப்போதும் நடந்து வருகிறது.” என்று கூறினார்.

More in இந்தியா

To Top