பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எ.பி.ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் ஒரு பகுதியாக, ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியின்போது அவா் பேசியதாவது:
பழங்குடியினரின் நீா், நிலம், காடு, இளைஞா்களின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.
பொருளாதார ஏற்றத்தாழ்வு, பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை நாட்டில் உள்ள இளைஞா்களின் எதிா்காலத்தை சீரழித்துள்ளன.
பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும், நாட்டில் உள்ள இளைஞா்கள் மற்றும் பழங்குடியினருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே எனது நடைப்பயணத்தின் நோக்கம் என்றாா் அவா்.