பொதுமக்கள் அதிர்ச்சி: சென்னை- மதுரைக்கு ஆம்னி பேருந்து கட்டணம் ரூ.4,900!

தீபாவளி பண்டிகை வருகின்ற 31-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தொடர்ச்சியாக நான்கு நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து பொதுமக்கள் அதிக அளவில் வெளியூர் செல்வார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்து நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளன.

அதன்படி, சென்னை-மதுரை செல்வதற்கு வழக்கமான நாள்களில் இருக்கைக்கு ரூ.800 முதல் ரூ.1,000 வரை கட்டணமாக வசூலிப்பட்டு வந்த நிலையில், தற்போது இருக்கைக்கு ரூ.2,000 முதல் ரூ. 2,300 வரை வசூலிக்கப்படுகிறது. படுக்கை வசதிக்கு ஒருநபருக்கு ரூ.900 முதல் ரூ.1,200 வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.2,300 முதல் ரூ.4,900 வரை வசூலிக்கப்படுகிறது.

ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தும் அதனை பொருட்படுத்தாமல் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News