உறவுக்கு அழைத்த 64 வயது பெண்.. அறைக்கு சென்ற 34 வயது இளைஞன்.. இறுதியில் நடந்த கொடூரம்..

அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியை சேர்ந்தவர் பேட்ரிசியா. 64 வயதாகும் இவர், இந்தியாவிற்கு சுற்றுலாவுக்காக வந்துள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுற்றுலாவை முடித்த அந்த மூதாட்டி, புதுச்சேரிக்கும் வந்திருக்கிறார். அப்போது, இவருக்கும், அழகு சாதனைக் கடை நடத்தி வந்த வடஇந்திய இளைஞர் மேக்ராஜிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வடஇந்திய இளைஞரை தனது அறைக்கு வரும்படி, நேற்று முன்தினம் பேட்ரிசியா அழைத்துள்ளார். இதையடுத்து, அங்கு வந்த அவர், அந்த மூதாட்டியின் விருப்பத்தின்பேரில், உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக, பாதியிலேயே நிறுத்தும்படி, அந்த மூதாட்டி கூறியுள்ளார்.

இருப்பினும், அதனை காதில் வாங்காத மேக்ராஜ், தொடர்ந்து வலுக்கட்டாயமாக உடலுறவில் ஈடுபட்டார். இதனால் வலி தாங்க முடியாத அந்த மூதாட்டி, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு மூதாட்டியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், நடந்தவற்றை அறிந்து, காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அந்த வடஇந்திய இளைஞரை தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News