“என்னால் எந்த பிரச்சனையும் வராது” – காதலருக்கு மெசேஜ்..! தூக்கிட்டு தற்கொலை செய்த ஆசிரியை..!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த வஸ்மிதா என்ற பெண், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரும், காரைக்கால் புதிய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 29-ஆம் தேதி அன்று, வீட்டிற்கு வந்த வஸ்மிதா, தனது அறைக்குள் சென்று, கதவை பூட்டிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து வஸ்மிதாவின் அறைக்குள் செல்வதற்காக, அவரது தங்கை முயற்சி செய்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும், தனது அறையின் கதவை வஸ்மிதா திறக்கவில்லை.

இதனால், சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, தனது அறையில் இருந்த மின்விசிறியில் வஸ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில், “இனிமேல் என்னால் எந்த தொல்லையும் வராது” என்று தனது காதலர் சுரேஷிற்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, அவர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. எனவே, காதல் பிரச்சனை காரணமாக, இந்த தற்கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News