புதுமைப் பெண் என்ற திட்டத்தை, தமிழக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை, அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு, உயர்கல்வி படிக்கும்போது, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பால், அதனை விரிவாக்கம் செய்யும் முடிவை தமிழக அரசை எடுத்துள்ளது. அதாவது, இந்த திட்டம், அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் தற்போது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக விழா, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திட்டத்தை தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75 ஆயிரத்து 28 மாணவிகள் பயன்பெறும் வகையில் மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. மேலும் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பில் மோட்டார் சைக்கிள் வாகனங்களை முதல்-அமைச்சர் வழங்கினார்.