புதுச்சேரியில் கடந்த மாதம் மின் கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதில் வீடுகளுக்கான மின் கட்டணம் 45 பைசா முதல் 75 பைசா வரை உயர்த்தப்பட்டது. இந்த மின்கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆம்ஆத்மி கட்சியின் நிர்வாகி சுந்தர்ராஜன் என்பவர் வம்பாகீரப்பாளையம் பகுதியில் உள்ள மின்துறை தலைமை அலுவலத்தில் கோவணத்துடன் வந்து மின்கட்டணம் செலுத்தியுள்ளார்.
மற்ற மாநிலங்களில் இருக்கும் இலவச மின்சாரத்தை புதுச்சேரியில் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.