தமிழகத்தை பொறுத்தவரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக சமீப நாட்களில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியும்.வெளிநாடு சென்று வேலை வாய்ப்பு உருவாக்கி தொழிற்சாலைகளை கொண்டு வர நடவடிக்கையை வேகமாக எடுத்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் கூட மின்சாரத்தால் இயங்குகின்ற பேட்டரி தொழிற்சாலை மூலம் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஐ டி தொழிற்சாலைகள் அதிகமாகவருகின்றன. அதுமட்டுமில்லாமல் பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உருவாக்குகின்ற பணியை முதலமைச்சர் அவர்கள் இணைந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் சவாலாக இருக்கிறது. ஏற்கனவே நாட்டில் 19% பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். கொரோனா காலத்தில் 2021 முதல் 2023 வரை சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அது போன்ற மூடப்பட்ட தொழிற்சாலைகள் படிப்படியாக திறக்கப்பட வேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவருடைய நிர்வாகத்தை முட்டுக்கட்டை போட வேண்டும் என்று தொடர்ந்து ஆளுநர் ரவி இது போன்ற வேலையை செய்து வருகிறார். தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பாரதிய ஜனதா எக்காலத்திலும் தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியாது. அண்ணாமலை ஒருவர் போதும் பாரதிய ஜனதா கட்சிக்கு சமாதி கட்ட அந்த நிலைமை தற்பொழுது உருவாகி வருகிறது என பேசியுள்ளார்.