புதுக்கோட்டை அருகே மிகவும் பின்தங்கிய கிராமத்தில் முதல் முயற்சிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி-ஆக தேர்வாகியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குக்கிராமமான கிழக்கு செட்டியாப்பட்டியைச் சேர்ந்தவர் பவனியா. இவருடைய பெற்றோர் சொற்ப சம்பளதிற்காக டீக்கடை நடத்திவருகின்றனர். அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த கிராமத்தில் தன்னம்பிக்கை மற்றும் விடாமுற்சியுடன் அரசுப் பள்ளி, அரசுக் கல்லூரி எனப் படித்து தனது ஒரே முயற்சியில் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி-ஆக தேர்வாகியுள்ளார்.
அந்த ஊருக்கு செல்ல குண்டு குழியும்,ஜல்லிக்கற்கள் போன்ற கரடு முரடான பாதையெல்லாம் கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் இந்த ஊருக்கு காலை ஒரு முறை, மாலை ஒரு முறை மட்டுமே பேருந்து வரும் எனக் கூறப்படுகிறது. தற்போது பவனியா டி.எஸ்.பியாக பணியில் சேர இருந்தாலும், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகவேண்டும் என்பதே எனது கனவு எனத் தெரிவித்துள்ளார். இவர் படிக்கும் குடும்ப சூழ்நிலை காரணமாக கூலி வேலைகளுக்கும் சென்றுள்ளார் எனக் கூறப்படுகிறது. இவருக்கு தமிழக விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பாராட்டி மேலும் ஐ.ஏ.எஸ் பயிற்சி மேற்கொள்வதற்கு உதவிகளையும் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அரசு பள்ளிகளில் படித்து போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு முன்மாதியாக திகழ்ந்துள்ளார்.