Connect with us

Raj News Tamil

புகழ் சொன்ன இன்னொரு மகிழ்ச்சியான செய்தி!

சினிமா

புகழ் சொன்ன இன்னொரு மகிழ்ச்சியான செய்தி!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம், ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் புகழ்.

இவர் , தனது நீண்ட நாள் காதலியான பென்சி என்ற பெண்ணை, கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில், நடிகர் புகழ், தனது திருமண நாளை முன்னிட்டு, ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள்…

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த புகழின் ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top