பூலித்தேவனின் 309-வது பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி மரியாதை!

ஆங்கிலேயருக்கு எதிராக வீரமுழக்கமிட்ட மாவீரன் பூலித்தேவனின் 309-வது பிறந்தநாளை ஒட்டி சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பூலித்தேவன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஆங்கிலேயருக்கு எதிராக வீரமுழக்கமிட்ட மாவீரன் பூலித்தேவனின் 309வது பிறந்ததினத்தை ஒட்டி சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, அலங்கரிக்கப்பட்ட பூலித்தேவனின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரிசையில் நாம் அறிய வேண்டிய முதல் பெயர் புலித்தேவன். 1715-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 1ம் தேதி பிறந்த இவர் திருநெல்வேலி மாவட்டம், நெற்கட்டும் செவ்வல் பகுதியை தலைமையிடமாக கொண்டு ஆட்சிசெய்த பாளையக்காரர்.

சிறு வயதிலேயே சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், வாள்யுத்தம் எனப் பல்வேறு போர் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்.
ஆங்கிலேயர் ஆட்சியில் கிழக்கிந்திய கம்பெனி பாளையக்காரர்களிடம் கப்பம் வசூலித்து வந்தபோது, வரி கட்ட மறுத்து தனது ஆங்கிலேய எதிர்ப்பை வெளிப்படுத்தியவர் புலித்தேவன்.

அதனால் 1755-ம் ஆண்டு மே மாதம் 2ஆம் நாள் ஆங்கிலேய படை நெற்கட்டும் செவ்வலை முற்றுகையிட்டு நடத்திய போரில் அவர்களுக்கு தோல்வியே மிஞ்சியது.

1857ம் ஆண்டு நடந்த சிப்பாய்கலகம். ஆனால் அதற்கு முன்னரே வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக வீரமுழக்கமிட்ட பூலித்தேவனின் வீரத்தை போற்றும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்றைய தினம் புலித்தேவனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News