புனே தொகுதியின் பாஜக எம்பி காலமானார் – பிரதமர் மோடி இரங்கல்

மகாராஷ்டிரா மாநிலம் புனே தொகுதியின் பாஜக எம்.பி கிரிஷ் பகத் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.

புனே நகரில் உள்ள காஸ்பா பெத் தொகுதியில் தொடர்ந்து 5 முறை எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்ற இவர் கடந்த 2019 லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றார்.

இவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : கிரிஷ் பபத் எளிமையான மற்றும் கடினமான உழைப்பாளி. சமூகத்திற்காக பணியாற்றியுள்ளார். அவரது சிறப்பான பணியை மக்கள் எப்போதும் நினைவில் வைத்து இருப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News