உலகின் தலைசிறந்த ராணுவங்களில் ஒன்றாக இந்திய ராணுவமும் விளங்கி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், இங்கு ராணுவ வீரர்களுக்கு, கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சிகள், அவர்கள் மன உறுதியை மேம்படுத்தவும் வழங்கப்படுகிறது. இத்தகைய பயிற்சிகளுக்கு பிறகும், ஒருசில ராணுவ வீரர்கள், பணியின்போது, தற்கொலை செய்துக் கொள்கின்றனர்.
இதுமாதரியான சம்பவம் ஒன்று, தற்போது நடந்துள்ளது. அதாவது, பஞ்சாப் படைப்பிரிவை சேர்ந்தவர் ராஜிந்தர் சிங். 40 வயதான இவர், பாதுகாப்புப் படை கமாண்டராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இவர் ஐதராபாத் பகுதியில் உள்ள லங்கர் ஹவுஸ் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தனது கையில் இருந்த ரஃபில் ரக துப்பாக்கியால், தன்னைத் தானே சுட்டுக் கொண்டு, தற்கொலை செய்துக் கொண்டார்.
இந்த சம்பவம், ராணுவ படை முகாமில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. ஆனால், இன்னும் தற்கொலைக்கான காரணம் குறித்து, காவல்துறையினர் கண்டறியவில்லை.