அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. பான் இந்தியா படமாக உருவான இந்த படம் , சுமார் 500 கோடிக்கு மேலாக வசூலித்து சாதனை படைத்தது. தொடர்ந்து புஷ்பா 2 உருவாகி வருகிறது.
இதற்கிடையே அமலாக்கத் துறை, வருமான வரி சோதனை என அப்படத் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் கடும் சோதனை நடைபெற்றதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. முக்கியமான கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாகவும், அதில் ‘பன்வர் சிங் ஷெகாவத்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் பகத் பாசில் நிறைவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.