தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் சுகுமார். இவர், சமீபத்தில் புஷ்பா 1, 2 ஆகிய இரண்டு ப்ளாக் பஸ்டர் வெற்றிப் படங்களை கொடுத்திருந்தார்.
இதனால், இவரது மார்கெட் மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. மேலும், சுகுமாரின் அடுத்த படத்தை எதிர்நோக்கி, ரசிகர்கள் அனைவரும் காத்துக்கிடக்கின்றனர்.
இந்நிலையில், இவரது அடுத்த படம் தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, நடிகர் ராம் சரணை வைத்து தான், அடுத்து அவர் படம் இயக்க உள்ளார்.
இதற்கு முன்னர், ரங்கஸ்தலம் என்ற படத்தின் மூலம், இருவரும் இணைந்திருந்தனர் என்பதும், அந்த படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது என்பதும், குறிப்பிடத்தக்கது.