சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2. சமீபத்தில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும், 11 நாட்களில் ஆயிரத்து 300 கோடி ரூபாயை, இப்படம் வசூலித்துள்ளதாம்.
இன்னும் சில நாட்களில், படத்தின் வசூல், ஆயிரத்து 500 கோடியை நெருங்கிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல், இந்திய திரையுலகினர் மத்தியில், மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.