புஷ்பா 2-வின் 3 நாள் வசூல்!

அல்லு அர்ஜூன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் புஷ்பா தி ரைஸ். முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் கடந்த 5-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆனது.

முதல் பாகத்தை போலவே, இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த இரண்டாம் பாகத்தின் வசூல் நிலவரம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

அதன்படி, உலகம் முழுவதும் 3 நாட்களில், 621 கோடி ரூபாய்க்கும் மேல், இப்படம் வசூலித்துள்ளதாம். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருந்த இப்படம், மூன்றே நாட்களில், அதைவிட அதிகமாக வசூலித்திருப்பது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News