அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் புஷ்பா 2. சுகுமார் இயக்கியுள்ள இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தான் தயாரித்துள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் 2 நாட்களில், 417 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம்.
முதல் நாளில் 283 கோடி ரூபாயும், 2-வது நாளில் 134 கோடி ரூபாயும், இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.