4 நாட்களில் இமாலய வசூல்! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை!

அல்லு அர்ஜூன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2. கடந்த 5-ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி, உலகம் முழுவதும் 4 நாட்களில், 829 கோடி ரூபாய்க்கு மேல் இப்படம் வசூலித்துள்ளது.

இந்திய திரைப்படம் வெறும் 4 நாட்களில், இவ்வளவு பெரிய இமாலய வசூலை பெற்றிருப்பது, இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. இதன்மூலம், இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஸ்டாராக அல்லு அர்ஜூன் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News