ரிலீசுக்கு முன்பே கோடிக்கணக்கில் வசூலை அள்ளிய புஷ்பா 2..!!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. புஷ்பா 2 படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

புஷ்பா 2 திரைப்படம் OTT-யில் மட்டுமே ரூ. 250 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து சாட்டிலைட் உரிமை ரூ. 130 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் பட்ஜெட் ரூ. 440 கோடி என கூறுகின்றனர். OTT மற்றும் சாட்டிலைட் விற்பனையில் மட்டுமே ரூ. 380 கோடி வரை வசூல் செய்துவிட்டது.

RELATED ARTICLES

Recent News